சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் உள்ள வனப் பகுதியில் என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்டுகள் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 22 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்ட்? உண்மை என்ன? - பாதுகாப்பு படை வீரர் கடத்தல்
டெல்லி: கோப்ரா படை வீரர் ஒருவரை மாவோயிஸ்ட் கடத்தியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்திவருகிறது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்கவுன்ட்டரின்போது கோப்ரா படை வீரர் ஒருவரை மாவோயிஸ்ட் கடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து பாதுகாப்பு படை விசாரணை மேற்கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிஜாப்பூரை சேர்ந்த பத்திரிகையாளரை தொடர்புகொண்ட மாவோயிஸ்ட்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் வெளியிட்ட தகவலை நம்ப காரணங்கள் இருப்பதாக உயர் மட்ட அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரை சேர்ந்த அந்த குறிப்பிட்ட கமாண்டோவை கண்டுபிடிக்க பாதுகாப்பு படையின் பல்வேறு அமைப்புகள் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளன.