அமராவதி:ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூரில் உள்ள கோவூர் நடுநிலைப்பள்ளியில் அந்த தொகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்எல்ஏ நல்லபுரெட்டி பிரசன்னகுமார் ரெட்டி நேற்று (நவம்பர் 10) ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான முட்டைகளில் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 150 மாணவர்களுக்கு 115 அவித்த முட்டைகள் மட்டுமே இருந்துள்ளது.
35 சத்துணவு முட்டைகள் அபேஸ்... காகங்கள் மீது குற்றச்சாட்டு... ஆந்திராவில் வியப்பு...
ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூரில் பள்ளியின் 35 சத்துணவு முட்டைகளை காகங்கள் தூக்கிச்சென்றதாக பணியாளர்கள் குற்றம்சாட்டிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையறிந்த பிரசன்னகுமார் ரெட்டி சத்துணவுப் பணியாளர்களிடம் விசாரித்தபோது, பற்றாக்குறையாக உள்ள 35 முட்டைகளை காக்கைகள் தூக்கிச்சென்றதாக பதிலளித்துள்ளனர். இந்த பதிலால் கோபமடைந்த பிரசன்னகுமார் ரெட்டி பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட அனைவரையும் கண்டித்தார். அதோடு பள்ளியின் மதிய உணவு ஊழியரை உடனடியாக பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் வியப்பையும், அலட்சியத்தையும் வெளிப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்