தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திடீரென கோடீஸ்வரர்களான இளைஞர்கள்.. கேரளாவில் நடந்தது என்ன? - Kerala

தவறுதலாக தங்களது வங்கிக் கணக்கில் விழுந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஐபோன் பர்சேஸ் என தண்ணீர் போல் செலவழித்த இரு இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பணம்
பணம்

By

Published : Dec 24, 2022, 10:54 PM IST

திருச்சூர்:கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கஞ்சனி அடுத்த அரிம்பூரைச் சேர்ந்த நிதின், மனு ஆகியோரின் வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் பணம் தங்களுக்கு கிடைத்த பரிசு என இஷ்டம் போல் செலவழிக்கத் தொடங்கி உள்ளனர்.

ஐபோன் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் குவித்து பணத்தை வீண் விரயம் செய்துள்ளனர். இந்நிலையில் வங்கி அக்கவுண்டில் இருந்த பணம் காணாமல் போனதை அறிந்த அதிகாரிகள் பின்னர் நடந்த தவறை அறிந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதற்குள் இளைஞர்கள் இருவரும் ஐபோன் வாங்குவது, வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது, பங்கு வர்த்தகம் என பலவழிகளில் ஊரார் பணத்தை தண்ணியாக செலவழித்துள்ளனர். ஏறத்தாழ 2 கோடியே 44 லட்ச ரூபாய் வங்கிப் பணத்தை இளைஞர்கள் தங்கள் பணம் என எண்ணி செலவழித்ததாகவும், அதுபோக 19 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ததாகவும் வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், வங்கி கணக்கை ஹேக் செய்து பணத் திருட்டில் ஈடுபட்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தகராறை தட்டிக்கேட்ட காவலர் கல்லால் அடித்துக்கொலை - வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details