மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் மிதாலி ராஜ், அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (ஜூன் 8) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல ஆண்டுகளாக உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!. உங்கள் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் எனது 2ஆவது இன்னிங்ஸை எதிர்நோக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் மிதாலி ராஜின் பங்கு அளப்பரியது. வரும் ஜூன் 26ஆம் தேதியுடன் தனது 23ஆவது ஆண்டு கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யும் மிதாலி ராஜ் 1999ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்டில் ஒட்டுமொத்தமாக 699 ரன்களை எடுத்துள்ளார். அதில், அதிகபட்சமாக 214 ரன்கள் அடித்துள்ளார். 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்களுடன் 7 ஆயிரத்து 805 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 89 டி20 போட்டிகளில் 2 ஆயிரத்து 364 ரன்கள் எடுத்துள்ளார்.