ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மியான் மேஜிக் என்று அழைக்கப்படுகிறார். இவர் மிகக் குறுகிய காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை பந்து வீச்சாளராக மாறியுள்ளார். முகமது சிராஜின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
முகமது சிராஜ் ஏழாம் வகுப்பு படிக்கும் போது தனது பள்ளி அணிக்காக முதல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டார். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது பேட்ஸ்மேனாக இருந்தவர் பந்து வீச்சில் ஏற்பட்ட நாட்டம் காரணமாகப் பந்து வீச்சாளராகத் தன்னை மாற்றிக் கொண்டார். 10 வகுப்பில் தனது படிப்பை நிறுத்திய சிராஜ் தனது வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் டென்னிஸ் பந்து போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
முகமது சிராஜ் கூறும் போது, எனது அண்ணன் இன்ஜினியரிங் படிக்க நான் படிப்பை நிறுத்திவிட்டு கிரிக்கெட்டில் நேரத்தைக் கழிப்பதில் எனது தாயாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால், அதற்கு மாறாக எனது தந்தை ஆட்டோ ஓட்டிய பணத்தில் தேவையான பண உதவியைச் செய்து வந்தார்.
இதையும் படிங்க:இங்கிலாந்து அணி மீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா?
இதனிடையே, எனது மாமாவின் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற ஒரு போட்டியில் 9 விக்கெட்கள் எடுத்ததைப் பார்த்து எனது தாயாரிடம் சிராஜை நான் பார்த்துக் கொள்ளுவதாக மாமா கூறினார். இதனையடுத்து 19 வயதில் கிரேஸ் பால் (பீஸ் பால்) கிரிக்கெட்டில் 5 விக்கெட்களை வீழ்த்தினேன். shoes (ஷூ) அணிந்து விளையாடுவதும் அதுவே முதன் முறை அதன்பின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தேன் தனது 23 வயது வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார். அதன்பின் ஹைதராபாத் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் பயிற்சி பந்து வீச்சாளராகச் சென்றேன். இந்த போட்டிக்கு முன் இரண்டு முறை ரஞ்சி போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அப்போது பந்து வீச்சு பயிற்சியில் பாரத் அருண் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் இருந்தார். அந்த ரஞ்சி போட்டிகளில் மொத்தமாக 45 விக்கெட்டுகளை எடுத்து இருந்தேன். என சிராஜ் கூறினார்.