தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Cricket World Cup 2023: கவனிக்கப்பட வேண்டிய பங்களாதேஷ் வீரர்கள்!

Five explosive Bangladesh players: 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி போட்டியிட உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் வங்கதேசம் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு நெருக்கடிகளை கொடுக்கும்படியாக உள்ளது. குறிப்பாக ஐந்து வங்கதேச அணியின் கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 8:25 PM IST

ஹைதராபாத்:வங்கதேசம் கிரிக்கெட் வீரர்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக 2007ஆம் அண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியைத் தோற்கடித்துள்ளனர். இதே போல் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணியைத் தோற்கடித்துள்ளது. 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்துள்ளனர். இந்த வருடம் வங்கதேசம் அணியில் சிறப்பாக விளையாடக் கூடிய ஐந்து வீரர்களைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்...

1. ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan)

ஷகிப் அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் ஆல்ரவுண்டர் ஆவார். இவர் பந்து வீச்சு எதிர் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். மேலும், இதுவரை நடைபெற்ற 240 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 308 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும், இவர் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இதுவரை நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 7384 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 37.7 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Shakib Al Hasan

2. முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim)

முஷ்பிகுர் ரஹீம் வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இவர் வங்கதேச அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்கக் கூடியவர். இவர் விக்கெட் கீப்பராக சிறந்த கேட் மற்றும் ஸ்டம்பிங் செய்துள்ளார். இவர் இதுவரை, விளையாடிய 256 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 9 சதங்கள், 46 அரைசதங்கள் அடித்துள்ளார். மேலும், மொத்தமாக 7406 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 37.03 ரன்கள் எடுத்துள்ளார். 222 கேட்சுகள் மற்றும் 10 ரன் அவுட்கள் மற்றும் 55 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Mushfiqur Rahim

3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman)

முஸ்தாபிசுர் ரஹ்மான் வங்கதேசம் அணியின் வேகபந்து வீச்சாளராக உள்ளார். இவரது பந்து வீச்சு சிறந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கு படி இருக்கும். குறிப்பாக இந்திய மைதானங்களில், அவருடைய பந்து வீச்சு சிறப்பாக அமையும். ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை அவர் விளையாடிய 98 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்டுகள் எடுத்து 5.07 என்ற விகிதத்தில் உள்ளார்.

Mustafizur Rahman

4. மெஹ்தி ஹசன் மிராஜ் (Mehdi Hasan Miraj)

மெஹ்தி ஹசன் மிராஜ் வங்கதேச கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளராக உள்ளார். இவர் தனது சிறந்து ஆஃப்-ஸ்பின் பந்துகள் எதிர் அணியை விக்கெட்டுகள் எளிதாக எடுக்கக் கூடியவர். மேலும், இவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும் உள்ளார். இவர் இதுவரை விளையாடிய 80 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 2 சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். மொத்தமாக 1046 ரன்களையும் சராசரியாக 23.24 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சு மூலம் 91 விக்கெட்கள் எடுத்து 4.73 என்ற விகிதம் எடுத்துள்ளார்.

Mehdi Hasan Miraj

5. லிட்டன் தாஸ் (Liton Das)

லிட்டன் தாஸ் வங்கதேச அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவர் அதிரடி ஆட்டத்திற்குப் பெயர் பெற்றவர். 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இதுவரை விளையாடிய 77 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 5 சதம் 10 அரை சதம் எடுத்துள்ளார். மேலும் மொத்தமாக 2250 ரன்கள் எடுத்துள்ளார் சராசரியாக 32.60 ரன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Liton Das

இதையும் படிங்க:2023 Cricket World Cup: இந்திய வீரர் முகமது சிராஜ் கடந்து வந்த கடினமான பாதை.. இளைஞர்களுக்கு ஓர் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details