ஹைதராபாத்:உலகிலுள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும் 2023-க்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அவரவர் பயிற்சிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். மேலும், உலகக்கோப்பை போட்டிக்கான நாள் நெருங்கும் நிலையில், அனைத்து அணி வீரர்களும் தங்களது பயிற்சியாளர்களுடன் இந்தியா வந்தடைந்தனர்.
ஐசிசி கிரிக்கெட் போடி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா என மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா என இந்தியாவில் உள்ள 10 மைதானனங்களில் இந்த போட்டிகள் நடைபெறவிருப்பது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் சிறப்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
இதன் முதல் போட்டி நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் அகமதாபாத்தில் உள்ள 'நரேந்திர மோடி' ஸ்டேடியத்தில் அக்.5 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு, அனைத்து நாடுகளும் தங்களின் அணியை சிறப்பான முறையில் மெருகேற்றி வருகின்றன. வீரர்களும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பயிற்சியில் முனைப்பு காட்டி வருகின்றன. இதில் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரும், போட்டியில் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களின் பக்கபலங்களை நிறைவு செய்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றன. அந்த வகையில், முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள், களத்தில் தங்களின் அசாத்திய விளையாட்டை வெளிப்படுத்தி, உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவணத்தை ஈர்த்தனர். பொதுவாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி களத்தில் கலக்கத்தை ஏற்படுத்துவதில் பெயர் பெற்றது. அதே போன்று தற்போதும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களின் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் நிறைந்துள்ளது, அணிக்கு கூடுதலாக பக்கபலத்தை சேர்க்கிறது. இதனால் இந்தியாவில் களம்காணும் மற்ற அணிகள் சற்று சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் பலமாக கணிக்கக்கூடிய அந்த ஐந்து வீரர்கள் யார்?
1. ரஷித் கான் (Rashid Khan)
இந்தப் பட்டியலில் முதலாவதாக இருப்பவர், ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான். ஆப்கானிஸ்தான் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். இதுவரை 94 ஒருநாள் போட்டிகளில் 4.21 எக்னாமி ரேட்டுடன், 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பௌலிங்கில் மட்டுமின்றி அணிக்காக பல்வேறு நேரங்களில், தனது அசாத்திய பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் 94 ஒருநாள் போட்டிகளில் 5 அரைசதங்களுடன் 1,211 ரன்கள் எடுத்துள்ளார். ரஷித்தின் அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 60 ஆகும். இந்த காலகட்டத்தில் அவரது சராசரி 19.53 ஆக இருந்தது.
2. முஜீப் உர் ரஹ்மான் (Mujeeb Ur Rahman)