எர்ணாக்குளம்: நடிகர் மோகன் லால் நடிப்பில் மே 13ஆம் தேதி மரைக்காயர் (அரபிக் கடலின் சிங்கம்) படம் வெளியாகிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் போஸ்டார்கள், ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் கோவிட் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிபோனது.
இதற்கிடையில் படத்துக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது லால் லேட்டன் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த லா லேட்டன் மோகன்லால் , “படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு. கடவுளின் ஆசிர்வாதத்தால் அனைத்தும் சாத்தியமாகியுள்ளது” என்றார்.
மரைக்காயர் படத்துக்கு தேசிய விருது, மோகன் லால் நெகிழ்ச்சி! மரைக்காயர் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி மற்றும் சைனீஷ் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.