நாடு முழுவதும் தீபாவளி நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் வட இந்தியாவில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா பரவிவரும் நிலையில் பட்டாசுகளை வெடித்தால் மேலும் காற்று மாசு அதிகரித்து குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரின் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை!
பெங்களூரூ: கரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்விதமாக தீபவாளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் கரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் விதமாக தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காற்று மாசு மற்றும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வட இந்தியாவில் சில மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசின் இந்த முடிவுக்குப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பட்டாசுகளுக்குத் தடை கோருவது குறித்து 23 மாநிலங்களுக்குத் தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
TAGGED:
பட்டாசு வெடிப்பதற்கு தடை