தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் 10 கட்டடங்களில் விரிசல் - Large police contingent has been deployed

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் 10 கட்டடங்கலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்டடங்களில் வசிப்போர் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் சுற்றுப்புற குடிமக்கள் அகற்றம்...!
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் சுற்றுப்புற குடிமக்கள் அகற்றம்...!

By

Published : Oct 14, 2022, 12:21 PM IST

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் பவ்பஜார் அருகே உள்ள மதன் தத்தா பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகள் நடந்துவருகின்றன. இந்த பணிகளால் பவ்பஜாரில் உள்ள 10 கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனைக்கண்டு அச்சமடைந்த அந்தக் கட்டடங்களில் குடியிருப்போர் வெளியேறினர். அதோடு, மெட்ரோ ரயில் அலுவலர்களுக்கும், மாநகராட்சி நிர்வாகத்தினருக்கும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உடனடியாக கட்டடங்களைவிட்டு வெளியேறுமாறு மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.

இதேபோல 2019ஆம் தேதி துர்கா பிதுரி சந்தில் உள்ள சில கட்டடங்களில் இதே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளால் விரிசல் விழுந்தது. அந்தக் கட்டடங்களில் வசித்தவர்களையும் கட்டாயப்படுத்தி காலி செய்ய மாநகராட்சி வற்புறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பத்ரிநாத் கோயிலில் அம்பானி தரிசனம்; ரூ.5 கோடி காணிக்கை

ABOUT THE AUTHOR

...view details