ஆன்லைன் செய்தி மற்றும் ஓடிடி தளங்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்லைன் செய்தித்தளங்கள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்! - Central government to regulate digital media
டெல்லி: ஆன்லைன் செய்தி மற்றும் ஓடிடி தளங்களை தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வெளியிடப்படும் செய்திகளும் தணிக்கை செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் செய்தித் தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், "இந்தச் செயலின் மூலம் மத்திய அரசின் நோக்கம் அம்பலமாகியுள்ளது. செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் செய்தி தளங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.