டெல்லிபல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவ-1அன்று கேரளாவைச்சேர்ந்த சில மாணவர்கள் கல்லூரிக்கு வேட்டி அணிந்து சென்றதற்காக ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். மேலும் அவர்களைத் தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து இச்செய்தி நாடு முழுவதும் வேகமாகப்பரவியது. உடையை வைத்து மாணவர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பல தரப்பினரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் தற்போது இந்த தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கு, கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏஏ ரஹீம் கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்த போதை கும்பலைச்சேர்ந்தவர்கள், வேட்டி அணிந்த மாணவர்களைக்குறிவைத்து அவர்கள் மீது இனவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.