தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு; ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதி - டி ராஜா ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டி ராஜா
டி ராஜா

By

Published : Jan 31, 2021, 8:12 AM IST

Updated : Jan 31, 2021, 1:05 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பங்கேற்க ஹைதராபாத் வந்துள்ளார். இதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் இந்த கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

கட்சியின் இரண்டாம் நாள் கூட்டம் ஹிமாத் நகர் பகுதியில் உள்ள மக்தும் பவனில் நடைபெற்றது. கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது டி. ராஜாவுக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள கமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் உள்ளதாகவும், தற்போது உடல் நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:விஎஸ் அச்சுதானந்தன் ராஜினாமா!

Last Updated : Jan 31, 2021, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details