தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தடுப்பூசி தகவல்கள் விரல் நுனியில் - கோவின் தளத்தில் புதிய வசதி - கோவின் தளம்

வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பூசி நிலவரத்தை அறிந்துகொள்ள கோவின் தளத்தில் புதிய வசதியை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

CoWIN launches new API
CoWIN launches new API

By

Published : Sep 10, 2021, 9:30 PM IST

டெல்லி: கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தை வழங்க, ஒவ்வொரு தனி நபருக்கும் கோ-வின் இணையதளம் ஏற்கனவே, டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இந்த சான்றிதழை கைபேசி, கணினி அல்லது டிஜி லாக்கரில் சேமிக்க முடியும். டிஜி லாக்கர் உதவியுடன் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தையும் தேவைப்படும்போது காட்ட முடியும். இந்த சான்றிதழை தேவைப்படும் நுழைவிடங்களான, மால்கள், அலுவலக வளாகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் காகித வடிவிலும், டிஜிட்டல் வடிவிலும் காட்டலாம்.

இந்நிலையில், முன்பதிவு செய்யும் பயணிகளின் தடுப்பூசி நிலவரத்தை அறிய ரயில்வே, விமான நிறுவனங்கள், விடுதிகள் விரும்பலாம். இவர்களின் வசதிக்காக, புதிய வசதியை கோவின் உருவாக்கியுள்ளது.

இதில் ஒருவரின் பெயர், கைபேசி எண்ணை உள்ளீடு செய்தால், அவர்களுக்கு ஓடிபி வரும். அதனைக் கொண்டு இணையதள பக்கத்தில் உள்நுழையும் போது, ‘0’ என வந்தால், தடுப்பூசி போடவில்லை என்றும், '1' என வந்தால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார் எனவும், '2' என வந்தால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார் என தெரிவிக்கும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, இதுவரை 72 கோடிக்கும் மேற்பட்ட, தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details