தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பசுவிற்குப் பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்: உரிமையாளர் போராட்டம் - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி: அரசு கால்நடைத் துறை மருத்துவமனையில் பசு மாட்டிற்குப் பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர், மருத்துவமனையைக் கண்டித்து பசுமாட்டுடன் உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

protest
protest

By

Published : Jan 29, 2021, 5:37 PM IST

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய பசு மாடு ஒன்று சினையாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று (ஜன. 29) காலை மாட்டிற்குப் பிரசவம் பார்ப்பதற்காக மறைமலை அடிகள் சாலையில் உள்ள கால்நடைத் துறை மருத்துவமனைக்கு கொண்டுவந்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் தற்போது மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறியதாகத் தெரிகிறது.

பசுவிற்குப் பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவருக்கு உரிமையாளர் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள், பால் உற்பத்தியாளர் சங்கம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் புதுச்சேரி அரசு கால்நடைத் துறை மற்றும் மருத்துவமனை முன்பு பசுமாட்டுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பசுமாட்டை மேட்டுப்பாளையம் கால்நடைத் துறை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details