தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த பெண்கள் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. மாட்டு சாணத்தில் தயாராகும் அகல் விளக்குகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆக்ரோ டெக் ஒருங்கிணைந்த விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு, சாணத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் முறையை பெண்களுக்கு கற்றுத் தருகிறது. கால்நடைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும், சீன விளக்குகளுக்கு மாற்றாகவும் மாட்டு சாணத்தில் அகல் விளக்கு தயாரிக்கும் பயிற்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வழங்கப்படுகிறது.