தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்டா தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவிஷீல்டு - சர்வதேச ஆய்வில் தகவல்

டெல்டா வகை கோவிட்-19 தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக லான்செட் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

கோவிஷீல்டு
கோவிஷீல்டு

By

Published : Nov 30, 2021, 3:20 PM IST

Updated : Nov 30, 2021, 6:56 PM IST

உலகளவில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இதுவரை 20 கோடி்ககும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின் காரணமாக 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்த காலத்தில் டெல்டா வகை உருமாறிய தொற்று பரவல் அச்சுறுத்தலாகக் காணப்பட்டது. அதேவேளை நாட்டின் தடுப்பூசி திட்டத்தை அரசு முடுக்கிவிட்டு, தொற்று பரவலை அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன. அதிலும், கோவிஷீல்டு தடுப்பூசியே இந்தியாவில் அதிகம் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், லான்செட் என்ற சர்வதேச சுகாதார நாளிதழ் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்பாடு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவிஷீல்டு இரண்டு டோஸ்கள் செலுத்திக்கொண்ட நபர்களில் 63 விழுக்காட்டினருக்கு தொற்று பரவல் தென்படவில்லை எனவும், 81 விழுக்காட்டினருக்கு தீவிர பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டெல்டா உள்ளிட்ட உருமாறிய தொற்றுகளுக்கு எதிராகவும் கோவிஷீல்டு சிறப்பாக செயல்படுவதாக லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:ஒமைக்ரான் பாதித்த ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பூசி - இந்தியா உதவிக்கரம்

Last Updated : Nov 30, 2021, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details