இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்துவருகிறது.
இந்தத் தடுப்பூசியின் திறன் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து ஆய்வகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், கோவிட்-19 தொற்றுக்கு எதிராக கோவிஷீல்டு வீரியத்துடன் செயல்படுகிறது எனவும், இதன்மூலம் உருவாகும் ஆன்டிபாடிகள் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்புத் தரும் தன்மைகொண்டவை எனவும் ஆய்வில் தெரிவிக்கின்றன.