மும்பை:கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு தனது மகள் உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் திலீப் லுனாவத் என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சீரம் இந்தியா நிறுவனம், பில்கேட்ஸ், மத்திய அரசு, மகாராஷ்ட்ரா அரசு, மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.