மும்பை:சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்று 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்ஐஐ தலைமை நிர்வாக அலுவலர் ஆதர் பூனவல்லா, தடுப்பூசி பயன்பாட்டில் 50 சதவீதம் மத்திய அரசிற்கும், மீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.