தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் கரோனா பாதிப்பு: 1 கோடியை நோக்கி...! - கரோனா

டெல்லி: நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

COVID19 infections, India's total cases rise to 94,62,810 With 482 new deaths
COVID19 infections, India's total cases rise to 94,62,810 With 482 new deaths

By

Published : Dec 1, 2020, 10:02 AM IST

Updated : Dec 1, 2020, 10:14 AM IST

நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வு அதிகமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 118 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் மொத்த பாதிப்பு 94 லட்சத்து 62 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 482 பேர் தொற்றால் மரணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 621 ஆகும்.

நான்கு லட்சத்து 35 ஆயிரத்து 603 பேர் தற்போது மருத்துவம் பெற்றுவருகின்றனர். மொத்தம் 88 லட்சத்து 89 ஆயிரத்து 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 ஆயிரத்து 985 பேர் குணமடைந்துள்ளனர்.

Last Updated : Dec 1, 2020, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details