தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச விமான போக்குவரத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள்! - சர்வதேச விமான போக்குவரத்திற்கு புதிய வழிகாட்டுதல்கள்

டெல்லி: உருமாறிய புதிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில், சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

உருமாறிய புதிய கரோனா வைரஸ்
உருமாறிய புதிய கரோனா வைரஸ்

By

Published : Feb 18, 2021, 5:40 PM IST

உலகம் முழுவதும் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அடுத்த உத்தரவு வரும் வரை, பிப்ரவரி 22ஆம் தேதி முதல், செயல்பாட்டு நடைமுறைகள் அமலுக்குவருகிறது. எங்கிருந்து பயணம் தொடங்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றார்போல் வழிகாட்டு நெறிமுறைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

யுனைடெட் கிங்டம், ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றிலிருந்து பயணம் மேற்கொள்பவர்களை தவிர்த்து மற்ற சர்வதேச பயணிகள் ஆன்லைனில் 'Air Suvidha' என்ற இணையதளத்தில் சுய விவர விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கையை பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக இதனை அளிக்க வேண்டும். தவறான பொய் தகவல் அளிப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details