கரோனா தொற்றுக்குத் தகுதியுள்ள நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்த, நாள் ஒன்றுக்கு 2.5 லட்சமாக இருந்த தடுப்பூசி உற்பத்தி 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனை முயற்சிகள் நடந்துவருவதாகக் குறிப்பிட்ட அவர், "ஆரம்பத்தில், ஒரு நாளைக்கு சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.
இது உற்பத்தித் திறனை அதிகரித்து மக்களுக்குச் சிறப்பான முறையில் தடுப்பூசி செலுத்த உதவும் என நம்புகிறேன்" என்றார்.