கரோனா தொற்று தடுப்பூசியின் பரிசோதனை மூன்றாம் கட்டத்தில் அதிக வெற்றியை பெற்றுள்ளது என பன்னாட்டு நிறுவனமான ஃபைசர் தெரிவித்துள்ளது. இச்செய்தி உலகளாவிய பங்குச் சந்தைகளை உற்சாகப் படுத்தியுள்ளன.
இதுகுறித்து இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் சுனில் சின்ஹா நமது ஈடிவி பாரத்திடம் கூறியதாவது; 'கரோனா தடுப்பூசி ஆய்வில் மூன்றாம் கட்டப் பரிசோதனையின்போது கிடைத்த வெற்றி, இருள் சூழ்ந்த சுரங்கப் பாதையில் ஒளி கிடைத்ததுபோல் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தையில் டவ் மற்றும் எஸ் அண்ட் பி 500 இன்ட்ராடே அதிக புள்ளிகளை எட்டியது, டவ் இன்ட்ராடே அதிகபட்சமாக 1,600 புள்ளிகளை (5.7%) எட்டியது. ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கத் தொடங்கியது.
பல ஐரோப்பிய நாடுகள் கரோனா பரவலின் ஆறு மாதங்களில், இருந்த சூழ்நிலையை மாற்றும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசி செய்தி வந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்களும், பங்குச் சந்தைகள் உள்பட இந்தச் செய்தியை அனைவரும் வரவேற்கவேண்டும்.
இந்நிலையில், நேற்று(நவ .9) கரோனா தடுப்பூசி 90 விழுக்காடு சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதும் பங்குச் சந்தைகளின் முன்னேற்றங்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.