தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தடுப்பூசி பதிவு தொடக்கம் - மத்திய அரசு - 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட்-19 தடுப்பூசி

18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கான முன்பதிவு வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது.

COVID vaccination
COVID vaccination

By

Published : Apr 25, 2021, 11:52 AM IST

நாடு முழுவதும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மே 1ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு வரும் ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், 18 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள cowin.gov.in. என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டம் மே 1ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 16ஆம் தேதிமுதல் இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய நிலையில், இதுவரை 14 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:1 ரூபாய்க்கு உயிர்காற்று: உ.பி. தொழிலதிபரின் தயாள குணம்

ABOUT THE AUTHOR

...view details