நாட்டில் நிலவும் கோவிட் பாதிப்பு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, 'இந்தியாவின் பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நாட்டில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஆனால் மத்திய அரசோ இந்த உண்மையை தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழ்நாட்டில் பலருக்கும் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 18 லிருந்து 45 வயது உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. மற்ற மாநிலத்திலும் இதே நிலைமைதான்.
இந்த சூழலில் பிரதமரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் தங்கள் அடிப்படை பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் செயல்பாடு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகிறது' என கண்டனம் தெரிவித்துள்ளார்.