மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்கள் பலர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து அரங்கேறிவருகிறது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கார்தா தொகுதிய வேட்பாளரான கஜல் சின்ஹாவுக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கோவிட் பாதிப்பு உறுதியானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று காலை உயிரிழந்தார்.
கட்சிக்கும் மக்களுக்கு தன்னலம் கருதாமல் உழைக்கும் நபரை இழந்தது பெரும் துயரமும் அதிர்ச்சியும் அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி ட்விட்டரில் இரங்கல் முன்னதாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரேசால் ஹக், ஆர்.எஸ்.பி. கட்சி வேட்பாளர் பிரதீப் குமார் நந்தி ஆகிய இருவரும் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட் நமது பொறுமையைச் சோதிக்கிறது - பிரதமர் மோடி கவலை