தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடிக்க நீர் இல்லாததால் கரோனா நோயாளி உயிரிழப்பா? காணொலியால் சர்ச்சை!

டேராடூன்: மருத்துவமனையில் குடிக்கச் சுத்தமான தண்ணீர் கிடைக்காததால், கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

covid
டெஹ்ராடூன்

By

Published : May 1, 2021, 7:05 AM IST

உத்ரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், கரோனா தொற்று பாதிப்பால் சுஷிலா திவாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண் வெளியிட்ட காணொலியில், "சுஷிலா திவாரி மருத்துவமனையில் உள்ள கோவிட் வார்டில் சிகிச்சைப் பெற்றுவருகிறேன். நேற்று முன்தினம் இரவு முதல், மருத்துவமனையில் குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் இல்லை.

எங்களுக்கு தயவுசெய்து குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போல், பலர் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்" எனக் கூறியிருந்தார்.

இந்தக் காணொலி வைரலான நிலையில், மருத்துவமனையின் அலட்சியம், அக்கறையின்மையைக் கண்டித்து பலர் பேசத் தொடங்கினர்.

குடிக்கத் தண்ணீர் இல்லாததால் கரோனா நோயாளி உயிரிழப்பா?

இது தொடர்பாக விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், "நோயாளிகளுக்குத் தினமும் நான்கு பாட்டில்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. காணொலி வெளியிட்ட பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாகவே, அவர் உயிரிழந்தார்" எனக் கூறியது.

இதையும் படிங்க:கணவன், மகள் இறந்த சோகம் - பெண் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details