தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா பாஜக தலைவர் பங்கேற்ற பேரணி: காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாடுகள் - தெலங்கானா

கரோனா பரவல் தீவிர வேகம் எடுத்துள்ள சூழலில் தெலங்கானா பாஜக தலைவர் பேரணி ஒன்றில் கலந்துகொண்டது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாஜக தலைவர் பங்கேற்ற பேரணி: காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாட்டு விதிகள்
பாஜக தலைவர் பங்கேற்ற பேரணி: காற்றில் பறந்த கரோனா கட்டுப்பாட்டு விதிகள்

By

Published : Apr 28, 2021, 7:56 PM IST

வாரங்கல்:தெலங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் சூழலில் அம்மாநில பாஜக தலைவர் வாரங்கல்லில் பேரணியை நடத்தியுள்ளார்.

வாரங்கல் மாநகராட்சித் தேர்தல் பரப்புரை பேரணியை நடத்திய அவர் அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அந்தப் புகைப்படங்களை அம்மாநில பாஜகவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

அந்தப் பேரணியில் கலந்துகொண்டோர் பெரும்பாலும் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்துள்ளனர். இதனை மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து அந்தப் புகைப்படங்களை தெலங்கானா மாநில பாஜக நீக்கியது.

நேற்று ஒரேநாளில் 10,122 பேருக்கு தெலங்கானாவில் தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்' சீனா அரசு!

ABOUT THE AUTHOR

...view details