தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களே உஷார்: வரும் 2-3 வாரங்கள் முக்கியமானதாக இருக்குமாம்! - கரோனா தொற்று

ஹைதராபாத்: பொதுமக்களை எச்சரிக்கும்விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது, கரோனா தீவிரமடைந்துவருவதால் வரும் இரண்டு மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்குமாம். அதனால் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

CCMB Director
CCMB Director

By

Published : Apr 19, 2021, 12:21 PM IST

இது குறித்து செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் இயக்குநர் மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், "கரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம்.

கரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால் இனிவரும் இரண்டு மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக உள்ளது. அதேபோல், மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821 ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details