தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா: மெத்தனமாகச் செயல்படும் தெலங்கானா அரசுக்கு நீதிமன்றம் குட்டு! - கரோனா வைரஸ்

ஹைதராபாத்: கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மெத்தனமாகச் செயல்படுவதாக தெலங்கானா அரசை ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.

Telangana HC
தெலங்கானா

By

Published : Apr 20, 2021, 8:24 AM IST

கரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கேரளா, ராஜஸ்தான்,பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், மாநிலத்தில் ஊரடங்கை அமல்படுத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ஹேமோ கோஹ்லி அமர்வில் நேற்று(ஏப்ரல் 19) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும், அமல்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் மாநிலத்தில் கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் குறித்த முழு அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

இதுமட்டுமின்றி, இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான உத்தரவை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடம் என எச்சரிக்கைவிடுத்துள்ளார். விரைவில் அரசிடமிருந்து உரிய பதில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா அரசுக்குக் உயர் நீதிமன்றம் கெடுவைத்த அதே நாளில்தான், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை மாநிலத்தில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:மாஸ்க் இருந்தால் கணவருக்கு எப்படி முத்தம் கொடுப்பது! டெல்லியில் காவலர்களிடம் ஜோடி வாக்குவாதம்

ABOUT THE AUTHOR

...view details