கோவிட்-19 இரண்டாம் அலையை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் - மம்தா கோரிக்கை - ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய மம்தா கோரிக்கை
கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரியை நீக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.
![மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் - மம்தா கோரிக்கை Mamta Banerjee](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:02:24:1620552744-11694879-234-11694879-1620546797909.jpg)
அதில், நாட்டில் கோவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு இடையே தன்னார்வலர்கள் பலர் தாமாக முன்வந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கிவருகின்றனர்.
அவர்களுக்கு மத்திய ஜி.எஸ்.டி., மாநில ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. என பல விதமான வரி இடர்பாடுகள் ஏற்படுகின்றன. எனவே, கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்கள் சிக்கல் இல்லாமல் கிடைக்க, அவற்றை ஜி.எஸ்.டி., சுங்க வரி போன்ற வரிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இது பெருந்தொற்றை எதிர்கொள்ள பெருமளவில் உதவும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.