தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளா, மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா - வருகிறதா 3ஆம் அலை! - கேரளாவில் கரோனா பாதிப்பு

நாட்டின் மூன்றாம் அலையை ஏற்படுத்தக் கூடிய மாநிலங்களாக கேரளா, மகாராஷ்டிரா அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Covid surge
Covid surge

By

Published : Aug 13, 2021, 3:20 PM IST

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை குறித்து நாட்டின் முன்னணி பொது சுகாதாரத்துறை நிபுணர் மருத்துவர் சுனீலா கர்க், ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.

இதில், "நாட்டின் மூன்றாம் அலையை ஏற்படுத்தக் கூடிய மாநிலங்களாக கேரளா, மகாராஷ்டிரா அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நாட்டின் தற்போதைய 50 விழுக்காடு கரோனா பாதிப்பு கேரளாவில்தான் உள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை மொத்தம் 2.24 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 64 லட்சம் பேர்தான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர்" என்றார்.

இந்த எண்ணிக்கை உயர்வு குறித்து மருத்துவர் கோல் கூறுகையில், "ரம்ஜான், ஓணம் உள்ளிட்டப் பல்வேறு பண்டிகைகளின் காலம் என்பதால், பொதுவெளியில் மக்கள் கூடும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகிறது.

பண்டிகை காலத்தில் கோவிட்-19 விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததே பாதிப்பு உயர்வுக்கு காரணமாக இருந்திருக்கும்.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை எச்சரிக்கையாக கொண்டு, மற்ற மாநிலங்கள் தங்களை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ட்விட்டர்- ராகுல் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details