புதுடெல்லி: நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 5 ஆயிரத்து 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக புதன்கிழமை (ஜூன் 8) காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர செய்திக் குறிப்பில், “நேற்று ஒரே நாளில் சிகிச்சைக்கு பின்னர் நாடு முழுக்க 3 ஆயிரத்து 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஆக மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 857 ஆக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டில் 3 ஆயிரத்து 714 கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. 7 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. அதிகப்பட்சமாக மும்பையில் 1,242 பேருக்கு புதிதாக கரோனா பெருந்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.