தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா நிலவரம்; 50,407 புதிதாக கரோனா தொற்று

இந்தியாவில் இன்று 50,407 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 804 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா நிலவரம்
இந்தியாவில் கரோனா நிலவரம்

By

Published : Feb 12, 2022, 11:44 AM IST

டெல்லி:இந்தியாவில் 50,407 புதிதாக கரோனாவால் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (பிப்ரவரி12)தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,10,443 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 3.48 சதவீதமாகவும், வாராந்திர தொற்று விகிதம் 5.07 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,36,962 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,14,68,120 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றால் 804 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,07,981 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்!

இந்தியாவில் இதுவரை பெரும்பாலானோர் கரோனா தடுப்பூசி செலுத்தி விட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக நீட்டிப்பு?

ABOUT THE AUTHOR

...view details