தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Covid19 மூன்றாம் அலை எப்படி இருக்கும் - அரசு தரப்பு விஞ்ஞானிகள் தகவல்

இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பு அக்டோபர் மாதத்தில் ஏற்படக்கூடும் என அரசு தரப்பு விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

COVID-19
COVID-19

By

Published : Jul 4, 2021, 5:00 PM IST

இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை பரவல் குறித்து கணிப்புகள் மேற்கொள்ள அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மணீந்தர் அகர்வால், ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வித்யாசாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விரிவான ஆய்வுத் தகவல்

இந்த ஆய்வில் மூன்று விதமான கணிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலில் நம்பிக்கை அளிக்கும் விதமான கணிப்பு. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்தும் சீரடைந்து இயல்பு நிலைக்கு வரும் என்பதாகும்.

இரண்டாவதாக, தடுப்பூசி செலுத்தும் பணிகள் சுமாராக இருந்து மிதமான பாதிப்பு உருவாகக் கூடிய வாய்ப்பாகும். மூன்றாவது கணிப்பு, தடுப்பூசித் திட்டம் குறைவாகவே இருந்த, நிலைமை மோசமடைந்தால் அக்டோபர், நவம்பர் மாதத்தில் மூன்றாம் அலை உச்சமடைய வாய்ப்புள்ளது.

நோயிலிருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புச் சக்தி எவ்வளவு நாள் நீடிக்கிறது, தடுப்பூசித் திட்டம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை வைத்தே மூன்றாம் அலைப் பாதிப்பு நிர்ணயிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஓராண்டுக்குள் மூன்று முதலமைச்சர்கள்

ABOUT THE AUTHOR

...view details