இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசிகளை நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், தடுப்பூசி போடும் முகாமை இன்று (ஜன.16) பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். அத்துடன், கோ-வின் எனும் செயலியையும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே அறிமுகப்படுத்தவுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 2,934 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கவிருக்கிறது. முதல்நாளில் ஒரு முகாமுக்கு 100 சுகாதாரப் பணியாளர்கள் வீதம் ஏறக்குறைய மூலம் லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்கு தேவையான மருந்துகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான சீரம் மருந்து நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களிடம் 1.60 கோடி டோஸ் மருந்துகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் உலகளவில் இந்தியாவில் தான் இறப்பு விகிதம் மிகக்குறைவாக உள்ளது. கரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓராண்டில் தடுப்பூசிகளை உருவாக்கியது மிகப்பெரும் சாதனை. தடுப்பூசிகள் இன்று நம் நாட்டு மக்களை சென்றடைய உள்ளது.