தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசி இறக்குமதிக்கு கனிவுகாட்டிய டிசிஜிஐ: விதிகளில் தளர்வுகள்!

By

Published : Jun 2, 2021, 5:58 PM IST

வெளிநாட்டு தடுப்பூசிகள் இந்திய சந்தைக்கு தாமதமின்றி வந்தடைய பெரும் தடங்கலாக இருந்த நடைமுறையை நீக்குவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) தெரிவித்துள்ளது.

தடுப்பூசி இறக்குமதி விதிகளில் தளர்வுகள்
தடுப்பூசி இறக்குமதி விதிகளில் தளர்வுகள்

டெல்லி: ஃபைசர், மாடர்னா போன்ற வெளிநாட்டு தடுப்பூசிகளை இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர, உள்நாட்டில் சோதனை செய்ய வேண்டும் என்ற கட்டுபாடுகள் அமலில் இருந்தது.

இந்த நடைமுறையால் புதிய தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் இருந்தது. தற்போது, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அந்தக் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக களைந்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, அந்தந்த நாடுகளில் உள்ள மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையங்களால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இனி உள்நாட்டில் சோதனை செய்யாமல் மக்களுக்கு செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் அமைப்பின் தலைவர் வி.ஜி. சோமானி வெளியிட்டுள்ள கடிதத்தில், "சமீப காலமாக கரோனா தொற்று அதிகரித்து வருவதையும், இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் அவசியத்தையும் அடுத்து இந்தியாவில் மிகப்பெரிய தடுப்பூசி தேவை நிலவுவதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி சரியாகக் கிடைக்காமல், அது செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் மத்திய அரசு போதிய ஊசிகளை மாநிலங்களுக்கு விநியோகம் செய்யாததுதான். ஆனால், தற்போதைய உத்தரவின் மூலம், இந்தியாவில் பயனாளிகளுக்கு எளிதில் தடுப்பூசி கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details