டெல்லி: ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) காலை 9.30 மணிக்குள் 15 வயது முதல் 18 வயது வரைக்குள்ளான 3 லட்சத்து 57 ஆயிரத்து 984 சிறார்கள் கோவிட் தடுப்பூசி வேண்டி கோவின் செயலியில் முன்பதிவு செய்துள்ளனர்.
கோவிட்-19க்கு எதிராக 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கின. CoWIN என்பது கோவிட்-19 தடுப்பூசி பதிவுக்கான மத்திய அரசாங்க இணையதள போர்டல் ஆகும். இது இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது.
இந்தப் போர்டலில் இதுவரை 92 கோடியே 18 லட்சத்து 61 ஆயிரத்து 878 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில், 57 கோடியே 37 லட்சத்து 14 ஆயிரத்து 969 பேர் 18-44 வயது வரையிலானவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 34 கோடியே 77 லட்சத்து 88 ஆயிரத்து 925 பேர் 44 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். இந்தத் தகவலும் கோவின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.