கரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவரும் மருத்துவருமான என்.கே.அரோரா, 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோர்போவாக்ஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படஉள்ளது. இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தின் பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்துள்ளது. கோர்போவாக்ஸ் தடுப்பூசி சிறுவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது.
முதல் தடுப்பூசிக்கு பின் 28 நாள்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் மார்ச் 16ஆம் தேதி முதல் 12 முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வயதில் சுமார் 31 லட்சம் மாணவர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 21 லட்சம் பேருக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. எனவே சுகாதாரத்துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, தனியார் பள்ளிகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை செயல்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விரைவில் 12-15 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி திட்டம்?