இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு:
கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 845ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச. 24) ஒரேநாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 92ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.