ஜெய்பூர் (ராஜஸ்தான்): நாடு முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள கோட்டா, ஜெய்பூர், ஜாேத்பூர், பிக்கானீர், உதய்பூர், அஜ்மெர், அல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டாங்க், ஷிகார் மற்றும் கங்காநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 1) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பில் " இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள சந்தைகள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை இரவு 7 மணி வரை செயல்படலாம். ஊழியர்கள் தங்களது பணியை முடித்துக்கொண்டு இரவு 8 மணிக்குள்ளாக வீடு திரும்ப வேண்டும். அல்லது மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், மருந்தகங்கள், திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரக்குவாகனங்கள் போக்குரவத்துக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாரணாசி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!