இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 தாக்கம் குறைந்துவருகிறது. கேரளா, கோவா மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு பாசிட்டிவிட்டி அளவு 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்து 21 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 279 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கோவிட் - 19 தற்போதைய நிலவரம்
இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை மொத்தம் ஒரு கோடியே இரண்டு லட்சத்து ஏழாயிரத்து 871 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 301 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.