தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பரவல்: புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயிலில் தரிசனம் ரத்து!

புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பொது தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பூரி ஜெகந்நாதர் கோயில்
sri jagannatha temple

By

Published : May 17, 2021, 10:45 AM IST

ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோயிலில் பொது தரிசனத்தை, அந்த கோயிலின் நிர்வாகமும் (எஸ்.ஜே.டி.ஏ), பூரி மாவட்ட நிர்வாகமும் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளன. எஸ்.ஜே.டி.ஏ தலைமை நிர்வாகி கிருஷன்குமார் தலைமையில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், 'ஸ்ரீ ஜெகநாதர் கோயிலில் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் தினசரி செய்யப்படும் பூஜைகள் கட்டாயம் கடைபிடிக்கப்படும். சேவயத் (அர்ச்சகர்) குடும்பங்களிடையே கரோனா தொற்று பரவினால், தினசரி பூஜைகள், 'சந்தன் ஜாத்ரா', 'சனன் ஜாத்ரா', 'ரத ஜாத்ரா' போன்ற சடங்குகளை கடைபிடிப்பது சிரமமாகிவிடும்.

இதனால் சேவய்த், அலுவலர்கள் என அனைவருக்கும் கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details