நாடு முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. வைரஸ் பரவலை தடுத்திட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கை அறிவித்து வருகின்றனர்.
டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்புக்கு வாய்ப்பில்லை! - COVID-19 Delhi
டெல்லி: கரோனா பரவலை தடுத்திட டெல்லி அல்லது அதன் சில பகுதிகளிலோ இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படமாட்டாது என, மாநில அரசு சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா, கரோனா பரவலை தடுத்திட மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமா என்ற கேள்வியை நீதிபதி ஏழுப்பினார்.
இதுதொடர்பான அறிக்கை டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோஹ்லி,சுப்ரமோனியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மாநில அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டது. அதில், "மாநில அரசு கூறியுள்ள அனைத்து தடை உத்தரவுகளும் டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எந்த விதமான புதிய நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது. இரவு நேர ஊரடங்கு நிச்சயம் கிடையாது" என குறிப்பிட்டிருந்தனர்.