வாஷிங்டன் : இந்தியாவில் கோவிட் பரவல், லாக்டவுன் தொடர்பாக பெண்களின் ஊட்டச்சத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது டாடா-கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனம் உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச், பிகாரின் முங்கர், மற்றும் ஒடிசாவின் காந்தமால் மற்றும் கலஹந்தி ஆகிய நான்கு பகுதிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, பெண்களின் உணவு தன்மை மாறியுள்ளதும் அவர்களுக்கு சரிவிகித உணவு கிடைக்காததும் தெரியவந்துள்ளது. அந்த வகையில், நாட்டின் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் 80 விழுக்காட்டினர் நேரடியாக பயன்பெறுகின்றனர்.
இது மட்டுமின்றி பெண்களுக்கு சத்தான உணவு கிடைப்பதிலும் தடை உள்ளது. இது தொடர்பாக அறிக்கையில், தொற்றுநோய்க்கு முன்பே பெண்களின் உணவில் மாறுபட்ட சரிவிகித உணவுகள் இல்லை. இதற்கிடையில், கோவிட் -19 நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று பொருளாதார ஆராய்ச்சி நிபுணர் சௌமியா குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்த வேண்டும். பெண்களின் ஊட்டச்சத்து மீதான தொற்று மற்றும் பிற சீர்குலைக்கும் நிகழ்வுகளின் ஏற்றத்தாழ்வான தாக்கத்தை கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : சிறப்பு குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்!