தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலிடத்தில் தமிழ்நாடு - ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு! - முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டுவதன் காரணமாக, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

covid-19
கரோனா

By

Published : May 21, 2021, 10:28 AM IST

Updated : May 21, 2021, 12:06 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மே 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை(மே.22) ஆலோசனை நடத்தவுள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 591 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று(மே.20) ஒரே நாளில் 35,579 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக கேரளாவில் 30,491 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் நேற்று (மே.20) 4,209 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 91 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735 ஆக உள்ளது.

தற்போது 30 லட்சத்து 27 ஆயிரத்து 925 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை, மொத்தமாக 19 கோடியே 18 லட்சத்து 79 ஆயிரத்து 503 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Last Updated : May 21, 2021, 12:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details