புதுடெல்லி: இந்தியாவில் கரோனா 2வது அலை நாள்தோறும் புதிய உச்சத்தை அடைகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட இந்த நோயாளிகளையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.