தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டில் 3.5 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு - ஒருநாள் கரோனா பாதிப்பு

நாட்டில் உச்சபட்சமாக நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

COVID-19 India tracker: State-wise report
COVID-19 India tracker: State-wise report

By

Published : Apr 26, 2021, 10:26 AM IST

டெல்லி:மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்று ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உள்ளது.

நேற்று ஒரேநாளில் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாயிரத்து 812 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆக உள்ளது.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 123 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி தெரியவருகிறது.

நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவரும் நிலையில், கரோனா தொற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் இதுவரை 14 கோடியே19 லட்சத்து11 ஆயிரத்து 223 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details