தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே நாளில் 1.15 லட்சம் பேருக்கு கரோனா: புதிய உச்சத்தைத் தொட்ட இந்தியா - கரோனா

இந்தியாவில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா
கரோனா

By

Published : Apr 7, 2021, 11:01 AM IST

இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

இதுவரை நாட்டில் ஒரு கோடியே 28 லட்சத்து ஓராயிரத்து 785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 17 லட்சத்து 92 ஆயிரத்து 135 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மொத்தம் எட்டு லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

ABOUT THE AUTHOR

...view details